புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2017 (14:43 IST)

வாட்ஸ் ஆப்பில் ஆடியோ வெளியிட்ட ரஜினி: ரசிகர்கள் சந்திப்பு ரத்து!

வாட்ஸ் ஆப்பில் ஆடியோ வெளியிட்ட ரஜினி: ரசிகர்கள் சந்திப்பு ரத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை அவரது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள நிகழ்ச்சி ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் இன்று திடீரென ரத்து செய்துள்ளார்.


 
 
இது தொடர்பாக இன்று ரஜினிகாந்த் வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கு ஒரு தகவல், உங்களை சந்தித்து உங்களுடன் போட்டோ எடுத்து 10 ஆண்டுகளாகிவிட்டது. சரியான வாய்ப்பும், நேரமும் இல்லாததால் அது நடக்காமல் போய்விட்டது.
 
வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. சுமார் 1500 முதல் 2000 பேரை சந்தித்து போட்டோ எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், தற்போது அந்த சந்திப்பை நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆகையால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
வரும் காலத்தில் ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களை தனித்தனியாக சந்தித்து போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்படும், இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும். அனைவரும் என்னை புரிந்து கொள்வீர்கள், ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன், நன்றி என ரஜினி கூறினார்.