திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (20:33 IST)

பிரபல நடிகர்கள் நடிக்கும் மழைநீர் சேகரிப்பு குறும்படம்...

உலகம் நவீனமாக வளர்ந்து வருகிற சூழ்நிலையில் நாமும் நவீனத்துவத்துக்கு மாறுவது என்பது இன்றியமையாதது.தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மக்கள் நேரடியாகவே நாட்டு நிலவரங்கள் பற்றி அறிந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் அரசின் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த  செய்திகள் மக்களுக்கு சென்று சேருவதற்கு   இவை தவிர்க்க, முடியாதாகும்.
 
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர்களைக்கொண்டு குறும்படம் தயாரிக்கப்பட்டு திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும் என்று உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
 
இந்த மழை நீர் விழிப்புணர்வு குறித்த பேரணியை உள்ளாட்சிதுறி அமைச்சர் எஸ்.பி,.வேலுமணி சென்னையில் நேற்று தொடங்கி வத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.