1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (07:54 IST)

11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ள நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது