1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (08:06 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Rain
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக் கடலில் உருவாகிய புயல் காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனையடுத்து மேற்கண்ட 10 மாவட்டத்திலுள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva