வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 25 மே 2024 (08:25 IST)

6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தற்போது கோடைகாலமாக இருந்தாலும் குறிப்பாக அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கோடை காலத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதும் குறிப்பாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றி இருப்பதும் தட்பவெப்ப நிலையை முற்றிலுமாக மாற்றி விட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran