1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 3 ஜூன் 2017 (18:20 IST)

புரசைவாக்கத்தில் உள்ள சிட்டிமால் வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிட்டிமால் வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 7 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.


 

 
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிட்டிமால் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 7 வாகனங்களில் வந்து போரடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இரண்டு நாட்களுக்கு சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் சிட்டி வணிக வளாகம் தீ விபத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எதுவும் வெளியாகவில்லை.