புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவோம் - த.பெ.தி.க. அறிவிப்பு
சிங்களவன் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் நுழைந்தாலும் அது திரைப்படத்துறை என்றாலும் சரி, வியாபாரத்துறை என்றாலும் சரி அதனை த.பெ.தி.க. ஒருபோதும் அனுமதிக்காது. அதனை முளையிலேயே கிள்ளி எறிவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள புதிய இளைஞர்கள் தமிழீழத்தை உணர்ந்து - புரிந்து, தமிழீழ மக்களுக்கு சரியான ஆதரவைக் கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார்கள்.
கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிரான கடுமையான போராட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவோம். இத்திரைப்படங்களுக்கு எதிராக யார் போராடினாலும் அவர்களுக்கு ஆதரவை வழங்குவோம் என இராமகிருட்டிணன் கூறியுள்ளார்.