செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 8 ஜூலை 2017 (17:15 IST)

தாமரைப் பூ மீது நிர்வாண பெண்; இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்திய வரைப்படத்தில் தாமரைப் பூ மீது நிர்வாணமாக பெண் நிற்பது போன்ற படத்தை ஃபேஸ்புக்க்கில் பதிவிட்டதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.




 

திமுக முன்னாள் அவைத்தலைவர் குத்புதீன் மகன் ரிபாதீன், அவரது நண்பர் விவசாயிகள் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பதிவிற்கு கமெண்ட் செய்துள்ளார். இந்திய வரைப்படத்தில் தாமரைப் பூ மீது பெண் நிர்வாணமாக நிற்கும் படத்தை கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த படத்தில் அவமானப்பட்டது நாங்கள் மட்டுமல்ல உங்கள் பாரத மாதாவும் தான் என்று எழுதப்பட்டுள்ளது.
 
இந்த படம் வைரலாக ஃபேஸ்புக்கில் பரவியைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் ரிபாதீன் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் புகார் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று அவரை கைதுச் செய்யக்கோரி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

புகைப்படம்: நன்றி PT