புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (15:09 IST)

பிரியங்கா காந்தியின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து: கொரோனா பாதிப்பா?

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்ய இருந்த நிலையில் திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது .
 
ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகத்திற்கு பிரியங்கா காந்தி வருவார் என்றும் அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் விஜய் வசந்துக்கு பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்பட்டது, ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி பிரியங்கா காந்தியின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரியங்கா காந்தியும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அதனால் அதனால் அவருடைய தமிழக சுற்றுப் பயணம் உள்பட அனைத்து தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
தமிழகத்திற்கு முதல் முதலாக பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவிருந்த நிலையில் தற்போது அந்த சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.