1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (10:45 IST)

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற சிறைக்கைதிகள் உரிமை மையம் மனு

பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அவரை சென்னை சிறைக்கு மாற்ற தமிழக தலைமை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.


 
 
பெங்களூர் சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் சொகுசாக இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் சிறையில் இருக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் வழக்கறிஞர் புகழேந்தி இரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ளார். 
 
அந்த மனுவில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் ஐநா மனித உரிமை விதிப்படி ஒரு கைதி தனது வசிக்குமிடத்திற்கு மிக அருகில் உள்ள சிறையில் அடைக்கப்பட வேண்டும். சட்ட விதிப்படி சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.