1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (14:50 IST)

கேப்டனை கலாய்ப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் : பிரேமலதா

தேமுதிக தலைவர் விஜயகாந்தை கிண்டலடித்து சமூகவலைத்தளங்களில் உலாவரும் மீம்ஸ்கள் பற்றி பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பொதுவாக, சமூகவலைத்தளங்களில் எல்லாவற்றுக்கும் மீம்ஸ் போட்டு கிண்டலடிப்பார்கள். அதுவும் பெரும்பாலான மீம்ஸ்கள் விஜயகாந்தை வைத்துதான் உருவாக்கப்படுகிறது. அவர் கோபமாக முறைப்பது, திட்டுவது, அடிப்பது என்று அவரை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலாவந்து கொண்டிருக்கிறது. 
 
ஒரு வார இதழுக்கு பேட்டி அளிக்கும்போது அவர் இதுபற்றி கருத்து தெரிவித்தார். அவர் கூறும்போது “கேப்டனை பற்றி மீம்ஸ் போடுகிறவர்கள் வேலை வெட்டி இல்லாமல், மொபைலை வைத்துக் கொண்டு சுற்றி வருபவர்கள். அவங்க ஓட்டு போட கூட போறதில்லை. அது எந்த விதத்திலும் பயன் தராது. அந்த மீம்ஸ்களை நாங்கள் கண்டு கொள்வதும் கிடையாது. 
 
காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று கூறுவார்கள். அதுபோல், கேப்னின் பெயரை கெடுக்க இப்படி செய்கிறார்கள். ஒன்று மீம்ஸ் போடுகிறார்கள் அல்லது அவரது உடல்நிலை பற்றி பேசுகிறார்கள். இல்லனா அவர் கோபப்படுவதை பற்றி எழுதுகிறார்கள். அவரை பற்றி வேறு எதும் பேச முடியாததால், இதையெல்லாம் கையில் எடுக்கிறார்கள். அவையெல்லாம் வெறும் வதந்திகள்தான்” என்று அவர் கூறியுள்ளார்.