புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 12 மே 2016 (22:42 IST)

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 
தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் இருந்து கோடை வெயில் வாட்டி வருகிறது. சில மாவட்டங்களில் அதிகபட்சம் 102 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால், பொது மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
 
கடந்த 4ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திரம் துவங்கி கத்திரி வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு அதிகமாக வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
 
இதைத்தொடர்ந்து தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கூறியிருப்பதாவது:- 
 
இலங்கை அருகே தென் மேற்கு வங்க கடலில் நாளை மறுதினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.
 
இந்த தாழ்வு நிலை 2 நாளில் தாழ்வு மண்டலமாக உருவெடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள உள்ள மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது
 
மேலும் வெப்ப சலனம் காரணமாக 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.