1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (15:38 IST)

எரிபொருள் விலை உயர்வு: திமுக போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து புதுச்சேரியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் எனவும் புதுச்சேரி மாநில அரசை கண்டித்தும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து திமுகவினர் மாட்டு வண்டியிலும், ஊர்வலமாகவும் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சட்டப்பேரவையை நோக்கி சென்றனர்.
 
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, திமுகவினர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.