திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (14:16 IST)

சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோர்களுக்கு தண்டனை..

18 வயதிற்கு குறைவான சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

 
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களிலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்கள் பெற்றோரின் வாகனங்களை ஓட்டுவதும், விபத்திற்குள்ளாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சென்னை சாலைகளில் சிறார்கள் தங்கள் பெற்றோர்களின் வாகனத்தை ஓட்டுவதுடன் பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சிறார்களை வாகனம் ஒட்ட அனுமதித்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். ஓட்டுனர் உரிமம் இல்லாத 18 வயதுக்குட்பட்ட குறைவான சிறார்களை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.