வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (10:54 IST)

பிலால் மாலிக்கிடம் திடீரென 2 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி ஜூன் மாதம் 24-ஆம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
தமிழகத்தையே அதிர வைத்த இந்த வழக்கு, தினமும் ஒவ்வொரு தகவல்களுடன், பல்வேறு கேள்விகளுடனும், மார்மங்களுடனும் நகர்ந்து வருகிறது. இந்த கொலையில் காவல்துறை விசாரிக்கும் முக்கியமான இரு நபர்கள் ராம்குமார் மற்றும் சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்.
 
கடந்த முறை ராம்குமார் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டபோது, பிலால் மாலிக்கும் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கில் பிலால் மூலம் பல்வேறு தகவல்களை போலீசார் பெற்றதாக கூறப்படுகிறது.
 
இந்த கொலை வழக்கில் அவ்வப்போது பிலால் மீதே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. பல்வேறு சந்தேகங்களும் பிலால் மாலிக் மீது எழுப்பபடுகிறது. காவல்துறையும் பிலால் மாலிக் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவில்லை.
 
இப்படி இந்த வழக்கில் முக்கியமான நபராக உள்ள பிலால் மாலிக்கிடம் நேற்று திடீரென காவல்துறை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. மேலும் வரும் 8-ஆம் தேதி ராம்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதால் அன்றைய தினமும் பிலால் மாலிக் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.