1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (16:22 IST)

ஐய்யோ.... போலீசார் என்ன செய்கிறார் பாருங்கள்.. அதிர்ச்சி வீடியோ

ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.  

   
 
இந்நிலையில், நேற்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். இது கேள்விபட்டு, திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மெரினா கடற்கரை நோக்கி வந்தனர். 
 
அவர்களை வரவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாரும் அவர்களை திருப்பி தாக்கினர். இதனால் அந்த பகுதி முழுவதும் கலவர பூமியாக மாறியது. 
 
இந்நிலையில், வேளச்சேரி பகுதியில் நேற்று இரவு, தெருவோரங்களில் நின்று கொண்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை, அந்த சாலை வழியே செல்லும் போலீசார் இருவர் தடியால் அடித்து சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. 
 
ஏற்கனவே, சாலையில் நின்று கொண்டிருக்கும் ஆட்டோ ஒன்றின் மீது போலீஸ் அதிகாரி ஒருவர் தீ வைக்கும் வீடியோ வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது இந்த வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.