வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 5 மே 2016 (15:10 IST)

ஒருபுறம் அன்புமணி மது ஒழிக்கப்படும் மறுபுறம் குடிபோதையில் பாமக தொண்டர் (வீடியோ இணைப்பு)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரணமதுவிலக்கு தான் என ஊருக்கு ஊர் பேசிக்கொண்டு வரும் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது பாமக தொண்டர் ஒருவர் போதையில் மயங்கி விழுந்தார்.


 
 
மதுவிலக்கு பற்றி அதிகமாக பேசும் பாமக இந்த தேர்தலில் தனது முக்கிய பிரச்சாரமாக அதை தான் செய்கிறது. இந்நிலையில் மதுவின் தீமைகளை பற்றி பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டிருந்த போது பாமக தொண்டர் ஒருவர் பயங்கரமான மது போதையில் நிற்க கூட முடியாமல் தள்ளாடி மயங்கி விழுந்தார்.
 
மதுவிலக்கு, மதுவிலக்கு என முழங்கி கொண்டு வரும் பாமகவின் அன்புமணியின் கூட்டத்தில் இப்படி தொண்டர் ஒருவர், கட்சி துண்டை அணிந்து கொண்டு மயங்கி விழும் அளுவுக்கு மது அருந்திவிட்டு வந்த சம்பவம் ஊடகங்களில் வீடியோவாக வெளியாகி உள்ளது.

 

 
 
இதனையடுத்து மற்றொரு பாமக தொண்டர் மதுவினால் மயங்கி விழுந்த தொண்டரின் கழுத்தில் ஒருந்து கட்சி துண்டை எடுக்கொண்டு சென்றார். மதுவிலக்கு பற்றி பேசும் கட்சிகள் முதலில் அதை தங்கள் கட்சியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். மதுவிலக்கு என்பது தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் போடும் நாடகம் எனவும் பேசுகின்றனர் இணையவாசிகள்.