மாயமான மாணவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு : கரூர் அருகே பரபரப்பு


Murugan| Last Updated: வெள்ளி, 17 ஜூன் 2016 (18:50 IST)
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட பி.உடையாபட்டி பகுதியை சேர்ந்தவர்  மரியவேலு. இவரது மகன் மரியவிவேக் அங்குள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். 

 
 
இந்நிலையில் கடந்த 11-06-16 சனிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்ற மரியவிவேக் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் மரிய விவேக் கிடைக்கவில்லை.
 
எனவே மகன் மரியவிவேக்கை காணவில்லை என்று  தோகைமலை காவல்நிலையத்தில் அவனது தந்தை மரியவேலு புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. 
 
இந்நிலையில் இன்று  பி.உடையாபட்டி  சீமைகருவேல் முட்கள் நிறைந்த காட்டு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீச,  அங்கு  சென்ற பார்த்த  இளைஞர்கள் பள்ளி சீருடையில் அழுகிய நிலையில் ஒரு சடலம் இருந்துள்ளது. 
 
விசாரணையில் அந்த சடலம் மரிய விவேக் என்றும், காவல்துறையினருக்கும், மரியவிவேக்கின் உறவினர்களுக்கும் தெரிந்துள்ளது.  
 
காவல்துறையினர் வழக்கு பதிந்து, சடலத்தை கைப்பற்றி   மாணவன் மரிய விவேக் இறந்தது கொலையா, தற்கொலையா, என்று  பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். 
 
பள்ளி மாணவன் மாயமாகி 5 தினங்களுக்கு பின்னர் அழுகிய பிணமாக கிடைத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :