1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2016 (16:41 IST)

பெண் வழக்கறிஞர் கிருபாவிடம் மன்னிப்பு கேட்டார் பியூஷ் மனுஷ்

சூழியல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் மேம்பாலப் பணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.


 
 
சமூகவலை தளங்களில் பியூஷ் மனுஷை கதாநாயகனாக சித்தரித்து கருத்துக்கள் வெளியாவதை பார்த்த கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் அடுக்கடுக்காக அவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் அவரின் நிறம் உள்ளிட்டவை குறித்து ஒருவர் பதில் அளிக்க, இந்த விவகாரம் பற்றிக்கொண்டது. பலரும் அந்த நபரின் நிறவெறி பதிலுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த பியூஷ் மனுஷ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கிருபா முனுசாமி வைத்த குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த அவர், சில நேரங்களில் நான் கோபப்பட்டு விடுகிறேன். என்னைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடப்பதால் அப்படி கோபப்பட்டு விடுகிறேன்.
 
குற்றச்சாட்டை வைத்த அந்த பெண்ணும் என்னுடன் வேலை பார்த்தவர் தான். ஆனால் அவர் ஏன் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை. அவரிடமும் கூட நான் ரூடாக நடந்து கொண்டிருக்கிறேன்.
 
நான் ரூடாக நடந்திருக்க கூடாது. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே அதை நான் மறுக்க மாட்டேன். அந்த பெண் ஒரு வழக்கறிஞர், மிகவும் உறுதியானவர். அப்போதே அதுகுறித்து அவர் பேசியிருக்கலாம். ஒருத்தர், ரெண்டு பேரை நான் புண்படுத்தியிருக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் பியூஷ் மனுஷ் கூறியுள்ளார்.