வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (14:04 IST)

ஜெயலலிதா மறைவால் கண்ணீருடன் கடிதம் எழுதிய பேரறிவாளன்!

ஜெயலலிதா மறைவால் கண்ணீருடன் கடிதம் எழுதிய பேரறிவாளன்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் கண்ணீர் மல்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


 
 
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததுமட்டுமல்லாமல் சட்டப் போராட்டமும் நடத்தி வந்தார் ஜெயலலிதா. இந்நிலையில் அவரது மறைவு பேரறிவாளனுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் பேரறிவாளன். அந்த கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.