1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:33 IST)

புதிய டாஸ்மாக் கடை… ஈரோடு மாவட்டத்தில் மக்கள் போராடியதால் பரபரப்பு!

இந்த கொரோனா காலத்திலும் தமிழக அரசு புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் என்ற இடத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியான மக்கள் அந்த பகுதியில் உள்ள பிரதான சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. மக்கள் போராட்டம் பற்றி அறிந்து அங்கு வந்த டாஸ்மாக் கடை உரிமையாளரிடமும் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

ஒரு கட்டத்தில் அங்கு வந்த காவல் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இந்த இக்கட்டான காலத்திலும் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து ஏழை எளிய மக்களிடம் இருந்து காசைப் பிடுங்குவதில் குறியாக இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.