1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2017 (09:03 IST)

சி.ஆர்.சரஸ்வதியை கதற விட்ட பொதுமக்கள்: சசிகலாவை ஆதரிப்பதால் ஃபோன் போட்டு திட்றாங்க!

சி.ஆர்.சரஸ்வதியை கதற விட்ட பொதுமக்கள்: சசிகலாவை ஆதரிப்பதால் ஃபோன் போட்டு திட்றாங்க!

தமிழக அரசியல் நிலவரம் தொடர்ந்து பரபரப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் யாருக்கு அழைப்பு விடுப்பார் சசிகலாவா? பன்னீர்செல்வமா? என தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


 
 
சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கவும் பரபரப்பு எகிறியது. சில எம்எல்ஏக்களின் ஆதரவும், பல மூன்னாள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தொண்டர்கள் ஆதரவு ஓபிஎஸுக்கு கிடைக்கவும் மீதமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பினால் சொகுசு விடுதியில் சிறைவைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் பொதுமக்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு அதிகரித்துள்ளது. தங்கள் தொகுதி எம்எல்ஏக்களை தொடர்புகொள்ளும் பொதுமக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் ஓபிஎஸுக்கு ஆதரவு அளியுங்கள் என வலியுறுத்துகிறார்கள்.
 
தொடர்ந்து தொகுதி மக்களிடம் இருந்து போன் கால்கள் வருவதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஃபோனை ஆஃப் செய்து வைக்கிறார்கள். இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியையும் பொதுமக்கள் ஃபோன் போட்டு திட்டியதாக அவர் கூறியுள்ளார்.
 
சி.ஆர்.சரஸ்வதி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அவருடைய ஃபோன் நம்பரை யாரோ சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள். பலராலும் இது பகிரப்பட்டதால் யார் யாரோ ஃபோன் போட்டு தன்னை கண்டபடி திட்டுவதாக சி.ஆர்.சரஸ்வதி குற்றம் சாச்சியுள்ளார்.
 
ஃபோனை ஆன் செய்ய முடியவில்லை கண்டபடி திட்டுகிறார்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் இரண்டு நாட்களாக ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாக சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.