வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 13 மே 2016 (18:33 IST)

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் புகார் அளிக்கலாம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.


 
 
இதன் ஒருகட்டமாக தேர்தல் தினம் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதாவது நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை என்றால் அது தொடர்பாக புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், செல்பேசி நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக, தமிழக தொழிலாளர் ஆய்வாளர் வாசுகி வெளியிட்ட அறிக்கையில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அனைத்து கடைகளும் நிறுவனங்களும், திரையரங்குகளும் மூடப்பட வேண்டும்.
 
அனைத்து பணியாளர்களுக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135-ன் படி வாக்குப்பதிவு பணியாளர்களுக்கு 16.5.16 அன்று ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களை  9445398740 என்ற கட்டுபாடு அறை எண் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.