1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 13 ஜூன் 2016 (10:21 IST)

அரசு மருத்துமனையில் ரூ.300க்காக நோயாளி கொலை

அரசு மருத்துமனையில் ரூ.300க்காக நோயாளி கொலை

அரசு மருத்துவமனையில் ரூ.300 லஞ்சம் தராததால், நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துமனை ஊழியர் மறுத்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மதுரை கோ.புதூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த  கணபதி தட்டச்சர் பணி செய்து வருகிறார். இவரது மகன் ராஜேந்திரபிரசாத் (18). மாற்றுத்திறனாளி.
 
இவருக்கு கடந்த மே 2ஆம் தேதி திடீரென வலிப்பு  நோய் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சை பெற மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
ராஜேந்திரபிரசாத்-கு சிகிச்சை செய்ய மருத்துவமனை ஊழியர் ஒருவர் ரூ.300 லஞ்சம் கேட்டார். உடனே கையில் பணம் இல்லதால், சிறிது நேரம் பின்பு தருவதாக கணபதி கூறியுள்ளார். அதை அந்த ஊழியர் ஏற்க மறுத்து சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார்.
 
இதனால் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டு, தனது மகன் இறந்துவிட்டதாக கணபதி  மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
 
இந்த சம்பவம் மதுரையில் மட்டும் அல்லாது தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.