1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (22:00 IST)

என்ன தவறு என் பேச்சில்? முதல்முறையாக ஆவேசமான அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அரசு வெளியிட்ட 12ஆம் வகுப்பு புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் பழமையானது என்று தவறாக பாடம் இருந்ததை தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டினர். இதனை திருத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தால், அரசும் இதனை கண்டிப்பாக செய்திருக்கும். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் அரசியல் ஆக்கும் தமிழ் வியாபாரிகள் இதனை பெரிதாக்கியதோடு, அரசியலிலும் கலந்து, காவியையும் விமர்சித்து, தாங்கள் மட்டுமே தமிழுக்கு சொந்தமானவர்கள் என்று காட்டிக்கொள்ள முயற்சித்தனர்.
 
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து கருத்து கூறுகையில், 'தமிழும் சமஸ்கிருதமும் கலையின் இரு கண்கள். எந்த மொழி தொன்மையானது என்று ஆராய்வதைவிட 2 மொழிகளிலும் உள்ள சிறப்புகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
 
உடனே பொங்கி எழுந்த தமிழ் ஆர்வக்கோளாறு நபர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் எந்த ஒரு விஷயத்தையும் அமைதியுடன் அணுகும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆவேசமாக தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
நான் சொன்ன கருத்து ‘பாரதப்பண்பாட்டின் இரு கண்கள் தமிழும், சமஸ்கிருதமும் ! எது எதை விட மூத்தது, சிறந்தது என்ற அர்த்தமற்ற ஆய்வை விட்டு விட்டு 2 மொழிகளிலும் உள்ள பொக்கிக்ஷங்களை உணர்ந்து, நமதாக்கி அடுத்த தலைமுறைக்கு கலைப்படைப்புகளின் வழியாக கொண்டு செல்வோம் !’ என்ன தவறு என் பேச்சில்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களின் டுவிட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கமெண்டுக்களாக பதிவாகி வருகிறது