1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:14 IST)

அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம்: ப.சிதம்பரம் யோசனை

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை அடுத்து வரும் 14ஆம் தேதி முடியும் ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறது 
 
இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப சிதம்பரம் அவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5000 வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா 
ரூ 5000 தந்தால் மொத்தச் செலவு ரூ 65,000 கோடி. இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
 
ப சிதம்பரம் அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 5000 மத்திய அரசு வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்