1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:13 IST)

வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.20 ஆயிரம்?

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக ரூபாய் 20 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூபாய் 5000 செலுத்தியவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் பன்னீர்செல்வம் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்