செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (21:28 IST)

விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு- முக்கிய அறிவிப்பு வெளியிட்ட சீமான்...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் டுவிட்டர் பக்கத்தில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக மனுக்களில் கையெழுத்து  பெறுவதற்காக தன் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்,

‘’பரந்தூரில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது தலைமையில் 10.06.2023 அன்று நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினையொட்டி வருகின்ற சனி (03.06 2023 ) மற்றும் ஞாயிறு (04.06.2023) ஆகிய நாட்களில், வானூர்தி நிலையம் அமைவதனால் பாதிப்பிற்குள்ளாகும் அப்பகுதி மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக மனுக்களில் கையெழுத்து பெறப்படவிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையும், காஞ்சிபுரம் மண்டலமும் இணைந்து ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் சென்னையைச் சுற்றியுள்ள மண்டலங்களின் அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கு பெறக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே வரும் 03.06.2023, 04.06.2023 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த உறவுகள் கட்சி சீருடை மற்றும் கொடிகள் ஆகியவற்றோடு இப்பரப்புரையில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.