1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:29 IST)

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழப்பு: தூத்துகுடி இளைஞர் தற்கொலை!

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த தூத்துக்குடி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பிகாம் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் ரம்மி விளையாட்டில் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் இழந்தார்.
 
அதன் பிறகு அவருடைய அம்மா அம்மா தனது சிறு தொழிலுக்காக கொடுத்து வைத்த பணத்தையும் ஆன்லைனில் இழந்தார். அதுமட்டுமின்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் கடன் வாங்கியும் ஆன்லைன் ரம்மி விளையாடினார்
 
ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பிரகாஷ் மன உளைச்சலுக்கு உள்ளாகி வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்து கொண்டார் அவருடைய மறைவு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது