திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (12:47 IST)

சென்னைக்கு நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ் சேவை.. இன்று முதல் சீராகும் என தகவல்..!

சென்னையில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், வெளி மாநிலங்களிலும் இருந்து சென்னைக்கு சுமார் 800 ஆம்னி பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் கன மழை பெய்யும் என்றும், வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டதை அடுத்து, மிகவும் குறைந்த அளவே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
தினமும் 800 ஆம்னி பேருந்துகள் சென்னைக்கு வரும் நிலையில், 350 பேருந்துகள் மட்டுமே கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்பட்டதாகவும், இன்று மழை ஆபத்து குறைந்ததால் நாளை முதல் மீண்டும் 800 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்ததை ரத்து செய்துவிட்டதால் குறைந்த அளவு பயணிகள் இருந்ததாகவும், அதனால் பல ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran