திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 11 பிப்ரவரி 2017 (04:17 IST)

ஓ.பி.எஸ். அரசியலில் இருந்து காணாமல் போவார்: கொந்தளிக்கும் நாஞ்சில் சம்பத்

நிச்சயமாக ஒரு நாள் ஓபிஎஸ் அரசியலில் இருந்தே காணாமல் போவார் என்று நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.


 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது ஓ. பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள நாஞ்சில் சம்பத், ”மதுசூதனன் தனி ஆளாக தான் பன்னீர் செல்வம் பக்கம் சென்றுள்ளார். அவருடன் வேறு யாரும் செல்லவில்லை. எம்எல்ஏக்கள் அனைவரும் விடுதியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவே தங்கியிருக்கின்றனர்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளார். அவருடன் சென்றவர்கள் அனைவரும் உபயோகம் இல்லாதவர்கள். நிச்சயமாக ஒரு நாள் ஓபிஎஸ் அரசியலில் இருந்தே காணாமல் போவார்” என்று தெரிவித்துள்ளார்.