செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (11:04 IST)

75% உயர்ந்த விலை: இம்முறை வெங்காயம் அல்ல...

வெங்காயத்தின் விலை உயர்வை தொடர்ந்து தற்போது உருளைகிழங்கின் விலையும் உயர்ந்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காய விலை எகிறியது. தற்போது ஓரளவிற்கு இந்த விலை ஏற்றம் கட்டுக்குள் வந்துள்ளது. 
 
ஆனால், தற்போது உருளைகிழங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டெல்லியில் உருளைக்கிழங்கின் விலை 75%, கொல்கத்தாவில் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. டெல்லி, கொலகத்தா மட்டுமின்றி மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் விலை அதிகரித்துள்ளது.
 
உருளைக்கிழங்கு அதிகம் விலையும் மாநிலங்களான பஞ்சாப், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பருவம் மாறு அக்டோபரில் மழை பெய்ததால் விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது என விலை உயர்வுக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதைத்தவிர்த்து அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு, எண்ணெய்,தேயிலை, சர்க்கரை பால், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் படிப்படியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.