1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (16:44 IST)

ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல......இவர்களும் தயார்: குஷ்பு

ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தயார் என குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற மறுநாள் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மும்பை சென்று வருவதற்குள் மாஃபியா கும்பல் ஆட்சியை பிடித்துவிட்டதே என தெரிவிந்திருந்தார்.
 
அதைத்தொடர்ந்து பலர் பதிலுக்கு அவரை கேலி செய்து கமெண்ட செய்திருந்தனர். அதற்கு குஷ்பு ஆவேசமடைந்து அவர்களுடன் மல்லுக்கட்டில் ஈடுப்பட்டார். தற்போது மிண்டும் மாஃபியா கும்பல் ஆட்சி என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாரக உள்ளது. சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்? என தெரிவித்துள்ளார்.