ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (13:19 IST)

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவு அடைந்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில தனியார் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான பாடங்களை சிறப்பு வகுப்பாக நடத்தி வருவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சற்று முன் வெளியிட்டுள்ள உத்தரவில் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

சிறப்பு வகுப்புகளால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைவதாக புகார் வந்ததால் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் இதனையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

பல தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டுக்கான பாடங்களை கோடையில் நடத்தி வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை பள்ளி கல்வித்துறை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran