1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:36 IST)

மோடி கைவிரிப்பு; ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு வாய்ப்பே இல்லை: பிரதமர் திட்டவட்டம்!

மோடி கைவிரிப்பு; ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு வாய்ப்பே இல்லை: பிரதமர் திட்டவட்டம்!

தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்களின் எழுச்சி கண்டு அடிபணிந்த தமிழக அரசு இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த பேச்சுவார்த்தை நடத்தியது.


 
 
ஜல்லிக்கட்டு நடத்தும் வரை நாங்கள் ஓய மாட்டோம். அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டை நடத்த அரசு வழி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த பிரதமர் மோடியை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும், காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பிரதமர் மோடியிடம் வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் தமிழகத்தின் நிலை குறித்தும், ஜல்லிக்கட்டு நடத்துவதின் அவசியம் குறித்தும், மாணவர்கள், இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் குறித்தும் முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார். ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மத்திய அரசால் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.
 
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக மக்கள் கோரிக்கை வைத்து வரும் வேளையில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறி அவசர சட்டம் இயற்ற மாட்டோம், உச்ச நீதிமன்றம் சொல்வதை கேளுங்கள் என மறைமுகமாக பிரதமர் மோடி கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.