திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 12 ஜூலை 2025 (12:34 IST)

பாஜகவுடன் 1000% கூட்டணி இல்லை.. அமித்ஷா பேட்டிக்கு பின் தவெக உறுதி..!

பாஜகவுடன் 1000% கூட்டணி இல்லை.. அமித்ஷா பேட்டிக்கு பின் தவெக உறுதி..!
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கப்படுமா?" எனக் கேட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சி எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 
 
இதற்குப் பதிலளித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை, "பாஜகவுடன் 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் கூட்டணி இல்லை என்பதை உறுதியாக அமித்ஷாவுக்குக் கூறுகிறோம்" என்றும், "அமித்ஷாவின் பதில் மற்ற கட்சிகளுக்குப் பொருந்துமே தவிர, எங்களுக்கு அல்ல" என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையாது என்பது இதன் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran