"கூட்டணிக்கு வேட்டு" பாஜகவின் புதிய முகம்

"கூட்டணிக்கு வேட்டு" பாஜகவின் புதிய முகம்


K.N.Vadivel| Last Modified வியாழன், 16 ஜூன் 2016 (10:42 IST)
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, டெல்லியில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் 10 நவோதயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற ஜெயலலிதாவிடம் கோரியுள்ளோம்.
 
மேலும், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றார்.
 
பாஜகவின் இந்த முடிவு, அதன் கடந்த கால கூட்டணிக் கட்சியான ஐஜேகே மற்றும் புதிய நீதி கட்சி ஆகியவை கடும் அதிர்ச்சி அடைந்தள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :