1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 10 மே 2017 (19:18 IST)

இது போன்ற தாய் தேவையில்லை ; நிவேதாவின் உடலை வாங்க மறுக்கும் பிள்ளைகள்

சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட நிவேதவின் உடலை வாங்க அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் மறுத்துவிட்டனர்.



 

 
கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை நிவேதா, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில், இளையராஜா என்ற வாலிபரால் சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். நிவேதாவுடன் பேஸ்புக் மூலம் நட்பாகி, பணம் கறந்து வந்த கணபதி, சிறு காயத்துடன் உயிர் தப்பினார். குற்றவாளியான இளையராஜா சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணமடைந்த நிவேதாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிவேதாவின் உடலை, பெற்றுக்கொள்ளும்படி போலீசார் அவரின் மகள் மற்றும் மகளிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால், இது போன்ற தாய் தங்களுக்கு தேவையில்லை. எனவே அவரின் உடலை பெறமாட்டோம் என அவர்கள் கூறிவிட்டனர். 
 
எனவே, அவரின் உடலை யாரிடம் ஒப்படைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.