1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (16:34 IST)

நித்யானந்தா...'கிராபிக்ஸ் ஆனந்தாவாக' மாறிய கேப்சூல் - 50 வீடியோவின் ரகசியம் என்ன...?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ பதிவொன்று தொலைக்காட்சிகளில்  வெளியானது. அதன் பின் அவரது கர்நாடக பிடதி ஆசிரமத்திற்கு எதிராகவும் ,அவருக்கு எதிராகவும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 
கர்நாடகத்தில் உள்ள அவரது அசிரமத்தின் மீது தொடந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது நடந்து சில நாட்களுக்கு பிறகு நித்தியானந்தா மதுரை இளைய ஆதினமாவதற்கு தற்போதைய மூத்த ஆதீனம் ஆதரவுதெரிவிக்க இதற்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரவே அவரது ஆசைகள் நனவாகாமல் போனது.
இந்நிலையில் தற்போது பரமசிவம் கேப்ஸ்யூல் - 50 என்ற தலைப்பில் நித்தியானந்தாவை வைத்து ஒரு பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஆங்கில வார்தைகளுடன் தமிழ் வார்த்தைகளும் இணைந்துள்ள அந்த பாடலில் நித்யானந்தாவை குறித்த புகழ்ச்சிகளே அதிகமாக தென்படுகின்றன. தன் பக்தர்களைப் பெருக்கி, தனது ஆதரவாளர்களை மகிழ்விப்பற்காகத்தான் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
நித்யானந்தவைன் பக்தர்கள் இந்த பாடலைப் பாட கிராபிக்ஸ் காட்சிகளுடன் அவர் சிரித்து கைகளை  நீட்டி அவர்களை ஆசீர்வதிப்பதுபோல் அந்த வீடியோ காட்சி அமைப்புகள் உள்ளன.