உள்துறை அமைச்சகத்திற்கு நீட் மசோதா அனுப்பி வைப்பு: முதல்வர் தகவல்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஏற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளதாக ஆளுநரின் செயலாளர் தமிழக முதல்வரிடம் கூறியுள்ளார்
இந்த தகவலை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் இந்த மசோதா குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றும் விரைவில் தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்