திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (08:38 IST)

வட்டி கொடுக்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ! – பைனான்சியருக்கு அதிரடி தண்டனை!

நாமக்கலில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வந்த பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த பைனான்சியருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் 2009ல் அதேபகுதியில் உள்ள நிதிநிறுவன அதிபர் சிவக்குமார் என்பவரிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். அந்த கடனுக்கான வட்டியை மாதாமாதம் செலுத்தி வந்த அவர் 2009ல் ஏப்ரல் மாதத்திற்கான வட்டி தொகையை தனது 19வயது மகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

வட்டி தொகையை கொடுக்க சென்ற அந்த பெண்ணை நிதிநிறுவன அதிபர் சிவக்குமாரும், அவரது நண்பர் ரவியும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் ரவி உயிரிழந்துவிட்ட நிலையில், சிவக்குமார் வழக்கு விசாரணை மட்டும் நீண்ட ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள மகிளா நீதிமன்றம் சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் அபராதமும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.