கோபித்துகொண்ட மனைவி; சமாதானம் பேச சென்ற கணவன் – மண்டையை உடைத்த மாமியார் !!!

Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (12:35 IST)
தன்னிடம் சண்டைப் போட்டுக்கொண்டு கோபித்து சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவனை மாமியார் மண்டையை உடைத்துள்ளார்.

பேரையூர் அருகே வசித்து வரும் செல்வேந்திரனுக்கு வரலட்சுமி எனும் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்ப விஷயங்கள் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்து வரலட்சுமி அவர் தாய் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இதைப் போல 10 நாட்களுக்கு முன்னர் தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 10 நாட்கள் ஆகியும் வராததால் செல்வேந்திரன் அவரை அழைத்துவர சென்றிருக்கிறார். ஆனால் வரமறுத்த வரலட்சுமி தனது தாயிடம் முறையிட்டிருக்கிறார். இதனால் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அதனால் செல்வேந்திரனைத் தாக்கியுள்ளார் மாமியார் வைரசிலை. இதனால் அடிபட்டு மருத்துவமனையில் சேர்ந்த செல்வேந்திரன் மனைவி மற்றும் மாமியார் மேல் புகார் கொடுக்க அவர்களைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் போலிஸார்.இதில் மேலும் படிக்கவும் :