ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2017 (13:46 IST)

தமிழக மீனவர் சுட்டுக்கொலை; இலங்கை அரசு அட்டூழியம் - வாய் திறக்காத மோடி

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவ இளைஞரை, இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நேற்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு குழுவாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது இந்திய எல்லையான ஆதம்பாலம் என்றா பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டினர்.
 
ஆனால் தமிழக மீனவர்கள் இந்த பகுதி இந்திய பகுதியே என வாக்குவதாக செய்ய, திடீரென தமிழக மீனவர்கள் மீது, கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்ற வாலிபர் பரிதாபமாக பலியானார். மேலும் காயமடைந்த டிட்டோ என்ற மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த சம்பவத்தால் மீனவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


 

 
இந்நிலையில், தமிழக மீனவர் ஒருவர், இலங்கை சுட்டுக் கொல்லப்பட்டு, இவ்வளவு மணி நேரமாகியும், பிரதமர் மோடி இதுபற்றி ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இதுவே, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அவர் இந்நேரம் வாயை திறந்திருப்பார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.