அவர் ஒரு மரண வியாபாரி - மோடியை கலாய்க்கும் சோ (வீடியோ)
மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த போது, பாஜக சார்பில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நேரத்தில், சென்னையில் மறைந்த சோ நடத்திய துக்ளக் பத்திரிக்கை தொடர்பான ஒரு விழாவில் மோடி கலந்து கொண்டார்.
அந்த மேடையில் பேசிய சோ, மோடி ஒரு மரண வியாபாரி என்று பேச தொடங்கினார். அதைக் கேட்டு மோடி மற்றும் அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைய, கருப்புப் பணத்தை, தீவிரவாதத்தை அழிக்க வந்த மரண வியாபாரி என்று கூற அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.
பத்திரிக்கையாளர் சோ மறைந்த இந்த நேரத்தில் அவரின் இந்த வீடியோ பேச்சு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.