ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:15 IST)

எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. தலைவர் எங்கள் கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார் - அமைச்சர் K.N. நேரு!

வ உ சிதம்பரனாரின் 153 பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
 
அதே போன்று திருச்சி நீதி மன்றம் எதிரே உள்ள வ உ சிதம்பரனாரின் சிலைக்கு அமைச்சர் K.N.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாநகர மேயர் அன்பழகன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்
 
இதனை தொடர்ந்து அமைச்சர் K.N நேரு செய்தியாளிடம் பேசும் பொழுது: 
 
லால்குடியில் பேசியபோது கூட்டணி பற்றி பேசியது தவறாக திருத்தி  போட்டுவிட்டனர்
 
எங்கள் கூட்டணி சரியான கூட்டணி தலைவர் எங்கள் கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார் 
 
ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்கு பிறகு  தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஆகிய பின்பு சட்டமன்றத்தில்  பெருமையாக பேசினார்கள்
 
கலைஞருக்கு பின்பு தளபதி ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும்   என்ற எண்ணத்தில் கூறியதே தவிர 
 
கூட்டணியை யாரும் விட்டுக் கொடுத்து போக வேண்டியது இல்லை
 
எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி 
 
கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையா பழகிக்கொண்டு உள்ளனர் 
 
வேண்டும் என்றே நான் பேசியதை  மாற்றி போட்டுவிட்டனர் என கூறினார்.