திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மே 2023 (09:59 IST)

பாக்குறதுக்கு புல்லட் ரயில் மாதிரி இருந்தா மட்டும் போதாது…! – ஜப்பானில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பானில் பயணம் செய்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள புல்லட் ரயில்கள் குறித்து வியந்து பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் பயணம் சென்றுள்ள நிலையில் அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களோடு பேசி முதலீட்டை ஈர்க்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பானின் ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவிற்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “ஒசாகா நகரில் இருந்து டோக்கியாவிற்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். உருவ அமைப்பில் மட்டும் புல்லட் ரயில் போல இல்லாமல் வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையாக உள்ள ரயில்கள் நமது இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வர வேண்டும். அதன் மூலம் எளிய, நடுத்தர மக்களும் பயனடைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K