செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (12:27 IST)

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை – மு.க.ஸ்டாலின் ட்வீட்!

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை – மு.க.ஸ்டாலின் ட்வீட்!
காந்தியின் நினைவு நாளான இன்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் அகிம்சை போராட்டத்தை கை கொண்டவரான மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது உருவ படத்திற்கு அரசியல் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் காந்தியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.