வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (18:29 IST)

நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க... ஆனா அவங்களுக்கு அறிவு இருக்காது: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

நடிகர்கள் ஒரு ஆர்வத்தில் அரசியலுக்கு வருவார்கள் ஆனால் அவர்களுக்கு அரசியல் அறிவு இருக்காது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே அதிக நடிகர்களுக்கு அரசியல் ஆசை வருவது தமிழ் திரை உலகில் மட்டும் தான் என்பதும் சிவாஜி, விஜயகாந்த் முதல் கமல் வரை பாக்யராஜ் முதல் விஷால் வரை பல நடிகர்கள் அரசியலுக்கு அரசியல் கனவுடன் வந்து சமாளிக்க முடியாமல் பின்வாங்கி விட்டனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இன்னும் அரசியல் கனவுடன் சில உச்ச நடிகர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அமைச்சர் தாமு அன்போதரன் இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பதிலடி கொடுத்தார். நடிகர்கள் நன்றாக நடிப்பார்கள் அவர்களை ரசிப்பதோடு விட்டுவிட வேண்டும், ஆனால் அவர்கள் தங்கள் முன் ஒரு பெரிய கூட்டம் கூடியவுடன் இந்த கூட்டம் எல்லாம் நமக்கு தான் என்ற கனவில், முதலமைச்சர் கனவில் அரசியலுக்கு வருகிறார்கள்

நடிகர்கள் ஒரு ஆர்வத்தில் அரசியலுக்கு வருகிறார்கள் தவிர அவர்களுக்கு அரசியல் அறிவு என்பது சுத்தமாக இருக்காது என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran