1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (13:18 IST)

போக்குவரத்து துறை தனியார் மயமாகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ss siva shankar stalin
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் காட்டியுள்ள நிலையில் இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்
 
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை என்றும் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக சாதக பாதகங்களை ஆராய மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அரசு பேருந்துகள் எதுவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். 
 
சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது என்றும் மக்களுக்கு கிடைக்கிற எந்த சலுகையும் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran