செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (13:21 IST)

மனைவியை தொடர்ந்து செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரொனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இதையடுத்து செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. ஆனால் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.